அடேங்கப்பா!… மல்லிகைப் பூவில் பேரறிஞர் அண்ணா முகம்!… ஓவியரின் அசத்தல் படைப்பு!
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மல்லிகையில் (jasmine) பேரறிஞர் அண்ணாவின் ஓவியம் வரைந்து கோவையை சேர்ந்த ஓவியர் யு.எம்.டி. ராஜா என்பவர் அசத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னால் முதல்வரும் திமுகவை தோற்றுவித்தவரான, பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் நேற்று, தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இவரின் நினைவு நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், பேரறிஞர் அண்ணாவின் “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு” என்ற வாசகத்தை நினைவு கூர்ந்து, மல்லிகையில் பேரறிஞர் அண்ணாவின் ஓவியம் வரைந்து கோவையை சேர்ந்த ஓவியர் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு கல்வி, தொழில், வேலைவாய்ப்பில் முன்னேறிய மாநிலமாக வருகின்றது. அதற்கான அடித்தளமிட்ட தமிழ்நாட்டின் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணா. சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்பட்டது.
அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. 1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. சமத்துவத்தை நிலைநாட்ட அவர், ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திராவிட அரசியலை ஆட்சி அரியணையில் ஏற்றிய முதல் தலைவர் அண்ணா.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒற்றுமை நல்லிணக்கத்தை போதித்த பேரறிஞர் அண்ணா, ஒரு தத்துவ ஞானி. எதிர் தரப்பின் கருத்துக்கும் மதிப்பளிக்கும் விதத்தில், மாற்றான் தோட்டத்து மள்ளிகைக்கும் மனம் உண்டு என்றார். இன்றளவும் தத்துவ ஞானியாக போற்றப்படுகின்ற பேரறிஞர் அண்ணாவின் நினைவை போற்றும் வகையில், கோவையை சார்ந்த ஓவியர் யு.எம்.டி. ராஜா, மல்லிகை பூவில் அண்ணாவின் ஓவியத்தை வரைந்து மலர் அஞ்சலி செய்தார்.