For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-க்கு கூடுதல் வட்டி..!! பெண்களே இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

To encourage saving habits among the people of the Nilgiris, the Co-operative Bank is implementing this Malayarashi Series Deposit Scheme.
12:21 PM Jul 02, 2024 IST | Chella
மகளிர் உரிமைத்தொகை ரூ 1 000 க்கு கூடுதல் வட்டி     பெண்களே இந்த திட்டம் பற்றி தெரியுமா
Advertisement

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1 கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களைப் பொருளாதாரச் சுதந்திரமுடையவர்களாக மாற்றும் பொருட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 2024 - 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த உரிமைத் தொகையை நமது வங்கிக் கணக்கில் சேமித்தால் 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி மட்டுமே கிடைக்கும். ஆனால், உரிமைத்தொகைக்கு 7.5 சதவீதம் வரை வட்டி தரக்கூடிய ஒரு சூப்பர் திட்டம் உள்ளது.

நீலகிரி மக்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி செயல்படுத்தி வருகிறது. நீலகிரியில் உரிமைத்தொகை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக, கூட்டுறவு வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை இருந்தால் அதற்கு 3% வட்டி மட்டுமே வழங்கப்படும். ஆனால், அதுவே இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டம் மூலம் சேமித்தால் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சேமித்து வரும் பட்சத்தில் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Read More : ”பாஜகவுடன் கூட்டணி வைக்கிறாரா தவெக தலைவர் விஜய்”..!! விஜயதாரணி சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா..?

Tags :
Advertisement