For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதானி விவகாரம்..!! ஒரே போடாக போட்ட முதலமைச்சர்..!! அதிர்ச்சியில் பாஜக, பாமக..!! சட்டப்பேரவையில் பரபரப்பு பேச்சு..!!

Adani has not come to meet me. I have not seen him. Do I need any more explanation than this? said the Chief Minister.
01:13 PM Dec 10, 2024 IST | Chella
அதானி விவகாரம்     ஒரே போடாக போட்ட முதலமைச்சர்     அதிர்ச்சியில் பாஜக  பாமக     சட்டப்பேரவையில் பரபரப்பு பேச்சு
Advertisement

அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி ஊழல் புகார் குறித்த விவகாரத்தில் தமிழக மின்சாரத்துறை பெயரும் அடிபடுகிறது என சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், "ஜி.கே.மணி மட்டுமல்ல, அவரது கட்சி தலைவரும் பொது வெளியில் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதானிக்கும் முதலமைச்சருக்கு தொடர்புள்ளது, அதானி முதல்வரை சந்தித்து விட்டு சென்றார் என பேசியிருக்கிறார். அதை இங்கு பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால், பேசவில்லை.

Advertisement

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான தகவல்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து வருகிறார். அதன் பிறகும் இந்த செய்திகள் வருகிறது. அதானி நிறுவனத்துடனான முதலீடுகளை வைத்து தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த நினைப்பவர்களை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். அதானி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வேண்டும்.

அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என இந்திய கூட்டணி கட்சியினர் குரல் எழுப்பி வருகின்றனர். திமுக மீது குற்றம் சொல்லி வரும் பாஜகவோ, பாமகவோ இதை ஆதரிப்பார்களா? இது குறித்து விளக்கி பேச தயாரா? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. என்னை வந்து அதானி சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை. இதை விட விளக்கம் தேவையா? என முதலமைச்சர் தெரிவித்தார்.

Read More : கார்த்திகை தீபம்..!! திருவண்ணாமலை மலை உச்சிக்கு செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை..? அமைச்சர் சேகர்பாபு பதில்..!!

Tags :
Advertisement