அதானி குழுமத்தின் சுவிஸ் வங்கி கணக்குகள் முடக்கம்..!! - ஹிண்டன்பர்க் கூற்றை மறுக்கும் அதானி குழுமம்
பண மோசடி விவகாரத்தில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல்வேறு வங்கிக் கணக்குகளை சுவிஸ் அதிகாரிகள் முடக்கியுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளில் மொத்தமாக 310 மில்லியன் டாலர்கள் இருப்பதாகவும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை அதானி குழுமம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அடிப்படை ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம். அதானி குழுமம் சுவிஸ் நாட்டில் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் எதிர்கொள்ளவில்லை. மேலும், எங்கள் நிறுவனத்தின் எந்தவொரு வங்கிக் கணக்கும் அதிகாரிகளால் முடக்கப்படவில்லை.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்தவொரு விளக்கம் வேண்டியும் நாங்கள் நீதிமன்ற உத்தரவை பெறவில்லை. வெளிநாட்டு சட்ட திட்டங்களை ஏற்று நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் நற்பெயர் மற்றும் சந்தை மதிப்பை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றுமொரு ஜோடிக்கப்பட்ட முயற்சி இது என அதானி குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Read more ; ரஷ்யா – உக்ரைன் போர் நெருக்கடி.. உர மானியத்தை அறிவித்து மோடி அரசு அசத்தல்..!!