For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதானி குழும வழக்கு..!! சிறப்புக்குழு தேவையில்லை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

11:26 AM Jan 03, 2024 IST | 1newsnationuser6
அதானி குழும வழக்கு     சிறப்புக்குழு தேவையில்லை     உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Advertisement

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹுண்டன்பர்க். இந்நிறுவனம் கடந்தாண்டு ஜனவரி மாதம் அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தது. இந்தியாவில் செயல்படும் அதானி குழுமத்தை சேர்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதி நிலையை உண்மைக்கு புறம்பான வகையில் காட்டுவதாகவும் பங்குச் சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஹுண்டன்பர்க் ஆய்வறிக்கையின் படி, அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக என்பதை விசாரிக்கும் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்புக்கு (செபி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விசாரணையை முடிக்காமல் தாமதப்படுத்துவதாக செபி மீது ஓய்வு பெற்ற சாப்ரே குற்றச்சாட்டை எழுப்பினார்.

உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்குள் செபி விசாரணையை நடத்தவில்லை என்பது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மனுதாரர்கள் தொடர்ந்தனர். இந்நிலையில், அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், அந்த விசாரணையை செபி அமைப்பே நடத்தும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags :
Advertisement