முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள்..!! செருப்பால அடிக்கணும்..!! கொந்தளித்த நடிகர் விஷால்..!!

A Hema committee like committee will be set up in Tamilnadu like Kerala in a few days.
11:46 AM Aug 29, 2024 IST | Chella
Advertisement

சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து பலரும் வெளிப்படையாக பேசி வரும் நிலையில், தமிழ் சினிமா நடிகைகளுக்கும் இதுபோல தொந்தரவுகள் இருக்கிறது என்று பல நடிகைகள் பேட்டி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கேரளாவை போல தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக தமிழ் நடிகர் சங்கம் நிற்கும்.

Advertisement

கண்டிப்பாக எவனோ ஒருத்தன் சினிமா வாய்ப்புக்காக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூப்பிடுவான். இதையெல்லாம் தவிர்க்க ஒரே ஒரு விஷயம் இருக்கு. அது என்னன்னா அந்தப் பெண்ணிற்கு மன தைரியம் வேண்டும். அந்தப் பெண்மணி அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட அந்த மாதிரி ஆட்களை செருப்பால அடிக்கணும். அதுதான் நான் சொல்லுவேன். அதோடு மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி விசாரணை நடைபெற்றது போல, தமிழ்நாட்டிலும் நடைபெறுமா..? என்று கேட்ட கேள்விக்கு கண்டிப்பாக பண்ணுகிறோம்.

தமிழ்நாட்டிலும் 10 பேர் கொண்ட குழு வைத்து ஒரு விஷயம் பண்ணுறோம். அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. அதற்கான அறிவிப்பு சீக்கிரம் வரும். அதை செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. இப்போ நடிகர் சங்கம் என்பது வெறும் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களும் சரிசமமாக இருக்காங்க. பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது எங்களுக்காக இருக்காங்களா? என்று கேட்கும் போது அவங்களுக்கு நடிகர் சங்கம் நாங்க இருக்கிறோம் என்று தைரியம் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : இந்த 3 ராசிக்காரர்களும் ராஜயோகம்..!! 200 வருடங்களுக்கு பிறகு நடக்கப்போகும் மாற்றம்..!! இனி பண மழை தான்..!!

Tags :
அட்ஜஸ்ட்மெண்ட்சினிமாநடிகர் விஷால்நடிகைகள்
Advertisement
Next Article