காதலில் விழுந்த சுனைனா! காதலரின் கையை பிடித்துக்கொண்டு நியூ போஸ்ட்!
காதலில் விழுந்தார் பிரபல நடிகை சுனைனா.. இணையத்தளத்தில் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல்..
கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, ட்ரிப், எஸ்டேட், லத்தீன் மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக வளர முடியாமல் பல ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார். ரெஜினா படத்தின் தோல்விக்கு பிறகு அவருக்கு புதிதாக எந்தவொரு பட வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை. திறமையான நடிகையாக இருந்தாலும் சினிமாவில் அவரது மார்க்கெட் ரொம்பவே அடிவாங்கியது. சில்லுக்கருப்பட்டி, நீர்ப்பறவை படங்களில் எல்லாம் அவரது நடிப்பு வேறலெவலில் இருக்கும்.
நடிகை சுனைனாவுக்கு 35 வயதாகிறது. ஆரம்பத்தில் நகுலுடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்த நிலையில், சில கிசு கிசு தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தன்னுடைய காதலரின் கையை பிடித்து கொண்டு, பூட்டு பூட்டப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு.. விரைவில் வெட் லாக் போட உள்ள தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் இவரின் காதலர் முகத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். உங்களை கட்டிக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாருன்னு சொல்லுங்க என சுனைனாவை ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். ரசிகர்களுக்காக விரைவில் அடுத்த அப்டேட்டை சுனைனா வெளியிடுவார் என தெரிகிறது.