காதலித்து ஏமாற்றிய பிரபல நடிகர்; தற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை ஸ்ரீபிரியா!!!
இயக்குநர் பி மாதவன் இயக்கத்தில் வெளியான 'முருகன் காட்டிய வழி' என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. 'அவள் ஒரு தொடர் கதை', 'உன்னைதான் தம்பி', 'பணத்துக்காக' போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். 200 தமிழ் படங்களில் நடித்த இவர், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இவர் நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், நடிகை ஸ்ரீபிரியா குறித்து தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்று அளித்துள்ளார். ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சி, நடிப்பதற்கு போட்டோ எடுக்கும் போது அவருடன் நடிகை ஸ்ரீபிரியாவும் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பிறகு தான் தயாரிப்பாளர்கள் ஸ்ரீபிரியாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
இவர் நடிகர் கார்த்திக் உடன் இணைந்து நினைவுகள் என்ற படத்தில் நடித்தார். அப்போது தன்னை விட நான்கு வயது அதிகமான ஸ்ரீபிரியா மீது கார்த்திக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென்று கார்த்திக் நடிகை ராகினியை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபிரியா, கார்த்திக் நடித்துக் கொண்டிருந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிங்கிற்கு கோபத்துடன் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்த கார்த்திக்கை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் மன விரக்தி அடைந்த ஸ்ரீபிரியா, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அவரை காப்பாற்றி விட்டனர். அதற்கு பிறகு தான், ஸ்ரீபிரியா மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்து கொண்டார்.
Read more: கொடூரத்தின் உச்சம்!! 9 வயது சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்…