For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கவனம்!!! ஒரே போன் காலில், ரூ.17 லட்சத்தை இழந்த நடிகை..

actress-soundarya-lost-17-lakhs-in-a-spam-call
05:42 PM Nov 09, 2024 IST | Saranya
கவனம்    ஒரே போன் காலில்  ரூ 17 லட்சத்தை இழந்த நடிகை
Advertisement

பிக் பாஸ் பார்க்காமல் எந்த வேலையும் பார்க்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிறியவர்கள், பெரியவர்கள் என ரசிகர்கள் பலர் உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். கடந்த ஏழு சீசன்களாக இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியை விட்டு அவர் விலகியுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக துவங்கப்பட்ட பிக் பாஸ் 8ல், விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். பிக் பாஸ் 8ல் மொத்தம் 18 போட்டியாளர்கள் நுழைந்தனர். நிகழ்ச்சியை சுவாரசியமாக்க தினம் தினம் புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு சீசனிலும் கடந்து வந்த பாதை டாஸ்க் இருக்கும். அதில் அவர்கள் கடந்து வந்த பாதையை குறித்து போட்டியாளர்கள் பேசுவது உண்டு. அதே போல இந்த சீசனிலும் 'நான்' என்ற தலைப்பில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த நிகழ்வுகள் குறித்து பேசினார்கள்.

Advertisement

இதில், சௌந்தர்யா தனது வாழ்கையில் நடந்த நிகழ்வு குறித்து பேசிய சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறும்போது, "8 வருடமாக நான் இந்த மீடியா பீல்டில் பல இன்னல்களை கடந்து முன்னேறிக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகளாக நான் கொஞ்சம் சொஞ்சாமாக பணம் சேர்த்து வந்தேன். நான் சேர்த்து வைத்திருந்த ரூ. 17 லட்சத்தையும் ஒரே ஒரு Scam Call மூலம் இழந்துவிட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைவதற்கு ஒரு மாதம் முன்பு தான் இந்த சம்பவம் நடந்தது, இதனால் மிக மோசமான டிப்ரஷனில் நான் இருந்தேன்" என்று கதறி அழுதார்.

FedEx கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் மும்பையில் இருந்து ஈரானுக்கு தங்கள் பெயரில் அனுப்பப்பட்ட பார்சலில் பாஸ்போட்டுகள் மற்றும் MDMA போதைப் பொருள் உள்ளிட்டவை இருப்பதாகவும் அது தற்போது ரிட்டன் வந்துள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரிப்பதாக ராகேஷ் சர்மா என்பவர் சௌந்தர்யாவுடன் பேசியுள்ளார். மேலும், நீங்கள் சம்பாதித்து வங்கியில் வைத்திருக்கிற பணம் இதுபோன்று போதைப் பொருள் காரணமாக சேர்த்ததா போன்ற கேள்விகளை கேட்டு மிரட்டியுள்ளார். அது மட்டும் இல்லாமள், உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணம் சட்டவிரோத பணம் இல்லை என்றால் தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறும், ஆய்வு முடிந்த பின், பணத்தை திரும்பி அனுப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இத்தனை உண்மை என்று நம்பிய சௌந்தர்யா, ரூ. 17 லட்சத்தையும் அனுப்பியுள்ளார். ஆனால் அவரது பணம் திரும்ப வரவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றப் பட்டது அவருக்கு தெரிய வந்துள்ளது. இவருக்கு நடந்த இந்த சம்பவம் மற்றவர்களுக்கும் நடக்க வாய்ப்புள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டும் இல்லாமல் படித்தவர்கள், இல்லத்தரசிகள் என வீட்டில் இருக்கும் அனைவரும் இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

Read more: புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா..? விவரம் என்ன..!

Advertisement