முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"அவரால் தான் இன்று நான் இப்படி இருக்கிறேன்" நடிகை ஸ்ருதிஹாசன் எமோஷனல் போஸ்ட்!

english summary
05:10 PM Jun 03, 2024 IST | Mari Thangam
Advertisement

ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது

Advertisement

இந்தியன் படத்தின் 2-வது பாகமான இந்தியன் 2 படம்  ஜூலை 12-ம் தேதி இந்தியன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தில் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தியன் 2 உள்ளது.

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘இந்தியன்2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார். நிகழ்ச்சி மேடையில், தனது தந்தையை சிறப்பிக்கும் வகையில் சில பாடல்களையும் தனது பேண்டுடன் சேர்ந்து பாடி அசத்தினார் ஸ்ருதி.

இது குறித்தான புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் அப்பாவுக்கு ட்ரிபியூட் தரும்படியான பாடல்களை ‘இந்தியன்2’ இசை வெளியீட்டு விழா மேடையில் பாடியிருப்பது மகிழ்ச்சியான விஷயம். நான் பாடும்போது, அவர் சிரிப்பதைப் பார்ப்பதற்கே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில், அவரால்தான் இன்று இசைத்துறையில் இருக்கிறேன். குறுகிய காலத்திற்குள் பாடல்களை இசையமைத்து, தயார் செய்த என்னுடைய இசைக்குழுவுக்கு நன்றி” என நெகிழ்ந்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தவிர, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித் மற்றும் மகள் அதிதி ஆகியோர் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா மேடையில் நடனமாடினர். இந்தியன் 2 படத்தின் நீளம் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக உள்ளதால் இதை 2 பாகமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்தியன் 3 படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.instagram.com/p/C7uGczZBQ-4/?utm_source=ig_web_button_share_sheet

Tags :
Actress Shruti HaasanArjith Shankar Bobby Simha Brahmanandam Indian 2 Indian 2 audio launch Indian 2 latest updates Kajal Aggarwal Kamal Haasandirector sankarhamal haasanindian 2lokesh kanagarajNelsonNewsRakul Preet SinghS ShankarShruti HaasanShruti Haasan instagramShruti Haasan Kamal HaasanShruti Haasan touches father Kamal Haasan's feetShruti Haasan's moviesShruti Haasan's upcoming projectsSilambarasan TRviral news
Advertisement
Next Article