ஃபோன் காலில் மிரட்டல்.. நானே பயந்து விட்டேன்.. உஷாரா இருங்க..!! - எச்சரிக்கும் பிக்பாஸ் சனம் ஷெட்டி
டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ஆன்லைன் மோசடி அழைப்பு தனக்கு வந்ததாகவும், தேவையில்லாத எந்த லிங்க்-ஐயும் தொடாதீங்க எனவும் நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மாடலாகவும், நடிகையாகவும் பிரபலமடைந்த சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். தமிழ் திரையுலகிலும் பெண்கள் காஸ்டிங் கவுச் போன்ற வன்முறைகளை சந்தித்து வருவதாக அண்மையில் சனம் ஷெட்டி கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, தன்னிடம் மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை சனம் ஷெட்டி இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில் வீடியோவில், தனக்கு இன்று காலையில் ஒரு போன் வந்தது. அதில் தான் மும்பையில் இருந்து ஒரு போலீஸ் ஆபீஸர் பேசுகிறேன் என்று சொல்லியிருந்தார். அதோடு உங்கள் போன் நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல் வந்துள்ளது என்றும் 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே நீங்கள் கைதாக வாய்ப்பு இருக்கிறது என்று மிரட்டினார்கள். அப்போது எனக்கு பயம் வந்துவிட்டது என்னவென்று விஷயம் கேட்டபோதும் உங்கள் போன் நம்பருக்கு ஏகப்பட்ட புகார் வந்துள்ளதால் உங்களுடைய முழு தகவல்கள் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்கா விட்டால் உங்கள் சிம் முடக்கப்பட்டு விடும் என்று கூறினார்கள்.
அப்போதுதான் நமக்கு சிம் வாங்கும்போது நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு கொடுத்துள்ளோமே அப்படி இருக்கும்போது எதற்காக ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கேட்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு நான் போனை கட் செய்து விட்டேன். முதலில் அவர்கள் போன் செய்தபோது எனக்கே பயம் வந்துவிட்டது.
அவர்கள் என்னை பயமுறுத்துற மாதிரி தான் போன் செய்தார்கள். நாம் சமூக வலைதளத்தை பற்றியும் அதில் நடக்கும் வேலைகள் பற்றியும் தெரிந்திருந்தாலும் முதலில் நானே அது உண்மைதானோ என்னவோ என்று பயந்துவிட்டேன். ஆனால் அது பற்றி எனக்கு தெரிந்த ஒருவரிடம் நான் விசாரித்தேன் அப்போது அவர்கள் எனக்கு சில அதிர்ச்சிகரமான விஷயங்களை சொன்னார்கள். அதாவது இதுபோல எனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு போன் வந்து இருக்கிறது.
அப்போது எதிர் தரப்பில் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ததும் அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டதாகவும் அவர் என்னிடம் சொன்னார். இது போன்ற மிரட்டல் கால் வந்தால் எந்த ஒரு லிங்கையும் தயவு செய்து கிளிக் செய்து விடாதீர்கள் எனவும் அப்படி கிளிக் செய்துவிட்டால் நம்முடைய போன் கேங் ஆகிவிடும் நம்முடைய பேங்க் டீடைல்ஸ் எல்லாம் மோசடி நபருக்கு தெரிந்து விடும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இப்போது இந்த வீடியோவை அவசரமாக வெளியிட்டேன் என்று சனம் ஷெட்டி பேசியிருக்கிறார்.
இதுகுறித்து என் நண்பரிடம் தெரிவித்தேன். இதேபோல், ஒரு மோசடி தனது நண்பருக்கு நடந்ததாக விவரித்தார். ஆனால், என்னுடைய நண்பர் அவர்கள் அனுப்பிய லிங்கை Click பண்ண அடுத்த செகண்ட் Phone -அ Hack பண்ணிட்டாங்க. இது போன்ற மோசடி நபர்களிடம் வரும் எதையும் அணுக வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கவனமாகே இருங்க, தேவையில்லாத எந்த லிங்க்-ஐயும் தொடாதீங்க என்று நடிகை சனம் ஷெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more ; முதல் மாநாடு..!! உறுதியான இடம்..!! அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் மனு..!!