அடிக்கடி மறதி.. குடும்பத்தினர் கூட கை விட்டுட்டாங்க.. ஹாஸ்பிட்டல் கூட்டு போக கூட யாரும் வர மாட்டாங்க..!! - மனமுடைந்து பேசிய சமந்தா
சிட்டாடல் தொடரில் நடித்தபோது நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். என்னை யாரும் அங்கு மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 8 வருடங்களாக காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகவும் பிரம்மாண்டமாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு சிறந்த ஜோடிகளாக பார்க்கப்பட்டு வந்த சமந்தா நாக சைதன்யா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தனர். இருவரும் சேர்ந்து மஜ்லி திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்கள். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாகவும் அமைந்தது.
தற்போது இருவரும் பிரிந்துள்ள நிலையில், நாக சைதன்யா சோபிதா துளிபலாவை கரம் பிடிக்க உள்ளார். இப்படி இருக்க, சமந்தாவோ, தன்னுடைய கேரியரை கவனித்து வருகிறார். சீட்டாடல் வெப் தொடரில் நடித்திருக்கும் சமந்தா, ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சமந்தா கூறுகையில், "சிட்டாடல் ஹனி பன்னி தொடர் எடுத்த சமயத்தில், மையோசிடிஸில் இருந்து குணமடைந்த நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். அப்போது, படப்பிடிப்பில் என்ன நடக்கிறது. யார் என் அருகில் இருக்கிறார். என் உடன் பணியாற்றிய சக நடிகர்களின் பெயர்களைக் கூட மறந்துவிடுவேன்.
படப்பிடிப்பின் போது சில நேரங்களில் நான் பாதி மயக்கத்தில் இருப்பேன். அப்போதும் கூட என்னை யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் படப்பிடிப்பு முடிந்து விடும். இன்னும் சில காட்சிகள் தான் அதை மட்டும் நடித்துவிடுங்கள் என கூறுவார்கள். அவ்வளவு ஏன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட இதுவரை யாரும் வந்ததில்லை என்பதை நினைத்து நான் ரொம்ப வருத்தப்பட்டு உள்ளேன் என சமந்தா கூறி உள்ளார்.
ஒரு மிகப்பெரிய நட்சத்திர நடிகை கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோயின் இப்படி இருக்கும்போது அவர்களது குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்கள் கூட அவருக்கு உறுதுணையாக இல்லையா? அந்த நேரத்தில் என கேள்வி எழுப்பி ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததோடு சமந்தாவிற்கு “Be strong sam”என கமெண்ட் செய்து வருகிறார்கள்.