For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

த.வெ.க வில் இணையும் ரோஜா? உயிருள்ள வரை கட்சியை விட்டு மாற மாட்டேன்..!! - அவரே சொன்ன பதில்

Actress Roja, who is involved in Andhra politics, has been spreading rumors that she will soon join Thalapathy Vijay's Tamil Nadu Vethi Kazhagam party, but now actress Roja has put an end to those rumours.
10:16 AM Sep 01, 2024 IST | Mari Thangam
த வெ க வில் இணையும் ரோஜா  உயிருள்ள வரை கட்சியை விட்டு மாற மாட்டேன்       அவரே சொன்ன பதில்
Advertisement

ஆந்திர அரசியலில் கலக்கும் நடிகை ரோஜா, தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அந்த வதந்திகளுக்கு நடிகை ரோஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

தளபதி விஜய் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது "தமிழக வெற்றிக் கழகம்" கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தனது கட்சியின் கொடியையும், கட்சி பாடலையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில், ஆந்திர அரசியலில் கடந்த 20 ஆண்டுகாலமாக பயணித்து வருபவரும், முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா இப்போது தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் விரைவில் இணையுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் நடிகை ரோஜா. ஆந்திரா சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு நடிகை ரோஜா தோல்வியைச் சந்தித்தார். இந்த பின்னணியில் நடிகர் விஜய் கட்சியில் நடிகை ரோஜா இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த செய்திக்கு பதில் அளித்துள்ள நடிகை ரோஜா திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் எனது சக நடிகரான சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போதே அந்த கட்சியில் சேரவில்லை. தற்போது விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார் என்பதற்காக நான் எப்படி அதில் சேருவேன்? என்னுடைய உயிர் உள்ளவரை ஜெகன் மோகன் ரெட்டிக்காகவே பணியாற்றுவேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில்தான் தொடர்ந்து பயணிப்பேன் என தெரிவித்துள்ளார் நடிகை ரோஜா.

Read more ; விடாது கொட்டும் கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு!!

Tags :
Advertisement