ப்ளீஸ்.. பாலியல் புகார் பற்றி மீடியாவிடம் பேசாதீங்க..!! பேரு கெட்டு போச்சு!! - நடிகை ரோகினி
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தயாரிப்பாளர் சங்கத்துடன் உடனான மோதல், நடிகர் சங்க கட்டடம் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நடிகை ரோஹிணி பேசினார். விசாகா கமிட்டி என்பது நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது பற்றி விசாரித்து வருவதற்காக அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக ரோஹிணி பேசுகையில், பாலியல் தொல்லைகள் குறித்து ஊடகங்களில் நேரடியாக தெரிவிக்க வேண்டாம். அதுபற்றி ஊடகங்களில் பேச வேண்டாம். பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை விசாகா கமிட்டியிடம் தெரிவியுங்கள்.
அப்படி பேசும்போது சினிமாத்துறை பற்றி பலருக்கும் தவறான எண்ணம் தோன்றலாம். திரைத்துறை மீதான நம்பிக்கை என்பதும் கெட்டுவிடும். சில யூடியூப் சேனல்கள் டிஆர்பிக்காக உங்களை (நடிகைகள்) பயன்படுத்தி கொள்வார்கள். தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க தான் விசாகா கமிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது என பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.