“முகுந்தின் ஜாதி பேர் சொல்ல உங்களுக்கு என்ன கேடு?” ஜாதியை மறைத்ததால் கொந்தளித்த நடிகை..
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன், காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார். அவரது வீரவாழ்க்கையை தழுவி எடுக்கபட்டது தான் 'அமரன்' திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயேன், சாய் பல்லவி நடித்துள்ள இத்திரைப்படத்தை சோனி நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளியன்று முதல் நாளில் 43 கோடி ரூபாய் வசூலித்த அமரன், அடுத்த 2 நாட்களில் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஒரு படம் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் அதை எப்படியாவது குறை சொல்ல வேண்டும் என்று பலர் நினைப்பது உண்டு. அப்படி தான் இங்கு ஒருவர் கிளம்பியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, நடிகை மதுவந்தி தான். ஆம், அமரன் படம் குறித்து ஆவேசமாக நடிகை மதுவந்தி பேசியிருக்கும் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைனாத்தில் பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அதில், நடிகை கஸ்தூரி, ஒய்.ஜி மதுவந்தி உட்பட பல பிராமண சமூகத்தை சேர்ந்த பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
அப்போது மதுவந்தி, ஒருவரைப் பற்றி படம் எடுத்தால் அவர் எந்த சமுதாயத்தில் இருந்து வருகிறார் என்பதை தெளிவாக காட்ட வேண்டும். அதற்கு இயக்குனருக்கு துப்பு இருக்க வேண்டும், தைரியம் இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய இராணுவ வீரரை பற்றின படம், தியேட்டர்களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால், அவர் பிராமணர் என்று காட்டுவதில் உங்களுக்கு என்ன கேடு வந்துவிட்டது. மற்ற சமூகத்தில் இருந்து வந்தவர்களை மட்டும் பாராட்டி படம் எடுக்கிறீர்கள். போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்றெல்லாம் பாடியதை நாங்கள் வரவேற்றோம். ஆனால், முகுந்த் வரதராஜன் பிராமணர் என்று சொல்லி கொள்வதில் என்ன வெட்கம்? அப்படி மூடி மறைத்து ஒரு படம் ஏன் எடுக்கணும்? இவரோட சமூக அடையாளத்தை சொல்லிவிட்டால் படம் நிற்காது, விநியோகிஸ்தர்கள் புக் செய்ய முடியாது என்று நினைத்து தான் இந்த வேலையை செய்து இருக்கிறார்கள். மதுவந்தியின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..
Read More : செம குட் நியூஸ்..!! ரூ.450-க்கு கேஸ் சிலிண்டர்..!! ரேஷன் கார்டு + ஆதார் கார்டு..!! உடனே இதை பண்ணுங்க..!!