'மொழி இல்லம்' இதுதான் என் கனவு..!! அம்மா பெயரில் சொந்த வீடு கட்டிய ரோமியோ பட நடிகை..!!
டி க் டாக், டப் ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து சாம்பியன் படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா மற்றும் இறுதியை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை அமைத்துக்கொண்டார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார். குறைவான படங்களில் நடித்திருந்தாலும் சினி துறையில் இவருக்கான மவுசு அதிகம் என்றே சொல்லலாம். இந்த நிலையில் சொந்தமாக வீடு கட்டி அதற்கு அவரின் அம்மாவின் பெயர் 'மொழி இல்லம்' என்று பெயர் வைத்துள்ளார். 29 வயதாகும் மிருணாளினி ரவி, தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அம்மாவின் பெயரில் புதிய வீடு கட்டியிருப்பது குறித்து புகைப்படங்களுடன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: மொழி இல்லம், அதற்காக மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது சிறுவயதில், எனது அப்பா வீடு கட்டி அவரது அம்மாவின் பெயரை வைத்தார். அப்போதிலிருந்து எனக்கும் எனது அம்மா பெயரில் வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தது. தற்போது, எனது கனவு நிறைவேறிவிட்டது. உங்களது ஆதரவும் ஆசிர்வாதங்களுமின்றி இதெல்லாம் நடந்திருக்காது. இதை நிகழ்த்த என்னை ஊக்கப்படுத்தியவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
Read more ; இனி இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. ரயில்வே டிக்கெட் காத்திருப்பு விதிகளில் மாற்றம்..!! – IRCTC தகவல்