மகாராஜா பட நடிகைக்கு இப்படியொரு நோயா? கையை பாத்தீங்களா! லேட்டஸ்ட் போட்டோவால் ரசிகர்கள் ஷாக்!
மகாராஜா படத்தில் நடித்த நடிகை மம்தா மோகன்தாஸ், தனக்கு விட்டிலிகோ எனும் அரியவகை நோய் பாதிப்பு இறுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மம்தா தாஸ். அந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் மம்தா மோகன்தாஸ் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை, நடிப்பது மட்டுமின்றி பாடுவது படங்கள் தயாரிப்பது என்று பன்முக திறமை கொண்டு விளங்குபவர் மம்தா.
கடந்த 2011-ம் ஆண்டு பஹ்ரைனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் மம்தா. விவாகரத்துக்கு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த மம்தா, மலையாளத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்தார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்த மம்தாவிற்கு மலையால சினிமாவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள்.
தமிழில் எனிமி படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தா மம்தா, சமீபத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜாவிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், அதில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அந்த புகைப்படத்தில் கையில் தோல் நிறம் மாறி சில இடங்களில் சாக்லேட் நிறத்திலும் சில இடங்களில் வெள்ளை நிறத்திலும் இருக்கிறது. இதற்கு காரணம் விட்டிலிகோ என்கிற அரியவகை நோய் பாதிப்பு தான். மம்தாவுக்கு அந்த நோய் பாதிப்பு இருப்பது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. உடலில் உள்ள நிறமி செல்கள் இறந்தாலோ அல்லது அதனுடைய செயல்பாடுகள் தடைபட்டாலோ இந்த விட்டிலிகோ என்கிற நோய் வருமாம். இது பரவக்கூடியது இல்லை என்றும் கூறப்படுகிறது. நடிகை மம்தாவுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Read more ; அவலம்!. நாட்டில் 80% அரசு மருத்துவமனைகளில் வசதிகளே இல்லை!. ஷாக் ரிப்போர்ட்!