கற்பழிக்கும் காட்சியை மட்டும் 4 மணி நேரம் எடுத்தார்கள், சத்யராஜ் குறித்து கஸ்தூரி கூறிய தகவல்..
கோவை மாவட்டத்தில் பிறந்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் சினிமாவின் புகழ் பெற்ற முக்கிய கதாநாயகனாக மாறியவர் தான் சத்யராஜ். சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரும் மதிப்பு அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக நடித்துள்ளார். சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் பல இடங்களில் குரல் கொடுப்பவர் தான் சத்யராஜ். சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் தான் கஸ்தூரி.
சத்யராஜ் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த அமைதிப்படை படத்தை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் சத்யராஜ் கஸ்தூரிக்கு அல்வாவில் மயக்கம் மருந்து கொடுத்து கற்பழித்துவிடுவது போல் காட்சிகள் வரும். அந்த காட்சியில் நடித்தது குறித்து சமீபத்தில் கஸ்தூரி அவரது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் கஸ்தூரி, சத்யராஜ் மிகவும் நல்ல மனிதர். அன்று நாங்கள் இருவரும் நெருக்கமான காட்சியில் நடித்தது இன்றும் என் நினைவில் உள்ளது. அந்த சீனில் நடிக்க எனக்கு சற்று அசவுகரியமாக இருந்தது. இதனை புரிந்து கொண்ட சத்யராஜ், மிகவும் ஜாக்கிரதையாக நடித்தார். இதனால் அந்த காட்சியை மட்டும் நாங்கள் 4 மணி நேரம் எடுத்தோம் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
Read more: என்னது கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா??