முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Actress Jayalakshmi Arrest | மோசடி வழக்கில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி அதிரடி கைது..!!

05:08 PM Feb 20, 2024 IST | 1newsnationuser6
Advertisement

மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

Actress Jayalakshmi Arrest | கடந்த 2022ஆம் ஆண்டு சினேகம் அறக்கட்டளை மூலம் நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தன் மீது சினேகன் அவதூறு பரப்புவதாக கூறி நடிகை ஜெயலட்சுமியும் புகார் அளித்தார்.‌ இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் மாறி மாறி புகார் அளித்து வந்தனர். ஜெயலட்சுமியோ இந்த அறக்கட்டளைதான் நீண்ட ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும், ஒரே பெயரில் அறக்கட்டளைகளையோ, நிறுவனங்களையோ இருவருக்கு எப்படி ஒதுக்குவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், தான் பாஜகவில் வளர்ந்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருக்கும் சினேகன் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். இதையடுத்து, சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து விசாரணையில் சினேகன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றனம் ரத்து செய்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, சினேகன், ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டுக்குச் சென்று திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். 3 மணிநேர விசாரணைக்கு பிறகு முக்கிய ஆவணங்கள் ஜெயலட்சுமி இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி, போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read More : https://1newsnation.com/multiplex-theaters-we-will-close-multiplex-theaters-in-tamilnadu-warning-owners-association/

Advertisement
Next Article