முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்..!! பிரித்தானிய நடிகரை கரம் பிடித்தார் எமிஜாக்சன்!!

Actress Amy Jackson held hands with her longtime boyfriend Ed Westwick yesterday.
10:06 AM Aug 26, 2024 IST | Mari Thangam
Advertisement

மாடல் அழகியாக வலம் வந்து கொண்டிருந்த எமி ஜாக்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளிவந்த மதராசபட்டினம் என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக நடிகையாக தனது அறிமுகத்தை கொடுத்தார். இதுதான் இவரது முதல் திரைப்பட அனுபவம் என்றே சொல்லலாம். ஆனால் அந்த படத்தை பார்த்தால் அவரது முதல் படம் என்று சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு அவர் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்து விட்டார்.

Advertisement

அதன்பின் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் George Panayiotou என்பவருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன், அவர் மூலம் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் இந்த ஜோடி 2021ஆம் ஆண்டில் பிரிந்தது.

அதன் பின்னர் எமி ஜாக்சன், பிரித்தானியாவின் பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக்கை (எட்வர்டு ஜாக் பீட்டர் வெஸ்ட்விக்) காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருமணம் தொடர்பான புகைப்படங்களை நடிகை எமி ஜாக்சன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

Read more ; 28 சுங்க சாவடிகளின் சுங்கக்கட்டண உயர்வு..!! – அன்புமணி கண்டனம்

Tags :
Actress Amy Jacksoncinema 360
Advertisement
Next Article