For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

2026இல் அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஷால்..!! விஜய்யுடன் கூட்டணியா..?

08:11 AM Apr 15, 2024 IST | Chella
2026இல் அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஷால்     விஜய்யுடன் கூட்டணியா
Advertisement

நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் களம் காண இருப்பதாக அறிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மக்களுக்கு தேவையானதை அவர்களின் பிரதிநிதியாக இருந்து முழுமையாக வழங்குவதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் என் பெயரும் இருக்கும். மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. அதனால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'' என தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், தற்போது விஷாலும் அரசியல் தொடங்குவதை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ‘Boat’ நிறுவன யூசரா நீங்கள்..? உங்கள் ரகசிய தகவல்கள் லீக்..!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

Advertisement