முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நான் நடிப்பது எனது மனைவிக்கு பிடிக்காது.. என்னை சினிமாவில் இருந்து விலக சொன்னார்..!! - சியான் விக்ரம் ஓபன் டாக்

Actor Vikram's recent talk about his wife is gaining attention on the internet.
05:02 PM Oct 25, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகர் விக்ரம் தனது மனைவி குறித்து சமீபத்தில் பேசிய தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் விக்ரம் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து இன்று முன்னணி நடிகராக மாறியுள்ளார். சாமி, தில், தூள், ஐ, ஜெமினி, அந்நியன், பொன்னியின் செல்வன் என பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் விக்ரம்.

Advertisement

கடைசியாக நடிகர் விக்ரம் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். கேஜிஎஃப் இல் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த தமிழர்களின் உருவாகி இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. ஆனால், இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது என்று மக்களிடையே சொல்ல வேண்டும்.

இவர் ஷைலஜா என்பவரை காதலித்து 1992 ஆம் ஆண்டு குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு துருவ் என்ற மகனும், அக்சிதா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த நேர்காணல், ஒன்றில், அவர் மனைவியை பற்றி ஒரு சில விஷயங்களை சொல்லி இருந்தார். விக்ரம் மனைவி ஷைலஜாவின் குடும்பத்தினர் பாடலாசிரியர் மற்றும் கல்வியாளர்களாக இருப்பவர்கள்.

சினிமாவில் நடிப்பதை தொடக்க காலங்களில் அவரது மனைவி விரும்பவில்லை என்று விக்ரம் கூறியுள்ளார். மனைவியின் வற்புறுத்தலை நிராகரித்த விக்ரம், சினிமா தான் தனது முதல் காதலி என்றும் அதற்கு பின்னர்தான் ஷைலாஜா என்றும் கூறி தனது உறுதியை வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னாளில் மனைவி ஷைலஜா விக்ரமின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அதுபற்றி நேர்காணலில் விவரித்த விக்ரம், தான் இந்த நிலைமைக்கு உயர்ந்ததற்கு மனைவிதான் காரணம் என்றும் தெரிவித்தார்.

Read more ; அடிக்கடி வெளியூர் வேலைக்கு செல்லும் கணவர்..!! கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

Tags :
actor vikramShe Didn't Support His Film Careervikram wife
Advertisement
Next Article