முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழக வெற்றி கழகம்: "வெடித்தது முதல் பஞ்சாயத்து.." "விவாதத்தில் வென்றால் 10 கோடி" தளபதி விஜய்க்கு நேரடி சவால்.!

02:40 PM Feb 03, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நேற்றிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

Advertisement

மேலும் கட்சியின் கொள்கைகள் குறித்த விளக்கமும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி ஆரம்பித்த உடனேயே கட்சியின் பெயரை பற்றிய சர்ச்சைகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. விஜயின் கட்சி பெயர் குறித்து முன்னணி நடிகரும் அரசியல் விமர்சகருமான எஸ்.வி சேகர் 'X' தளத்தில் கிண்டல் செய்து பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் கட்சியின் பெயர் குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என தளபதி விஜய்க்கு சவால் விடப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தெரிவித்துள்ள தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, " கழகம் என்றால் சூதாடும் இடம் என்று அர்த்தம். இதை எப்படி கட்சிக்கு பெயராக வைக்கலாம் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.? மேலும் கழகம் என்ற வார்த்தை குறித்து தங்களுடன் விவாதித்து வெற்றி பெற்றால் 10 கோடி ரூபாய் பரிசு தருவதாகவும்" விஜய்க்கு சவால் விட்டிருக்கிறார்.

Tags :
debateNew ControversyTamilnaduthalapathy vijaytvk
Advertisement
Next Article