முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"புதிய சிக்கலில் விஜய் கட்சி.. 'TVK' பெயரை பயன்படுத்த முடியாது"! எம் எல் ஏ வேல்முருகன் அதிரடி.!

01:05 PM Feb 07, 2024 IST | 1newsnationuser4
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் கடந்த வெள்ளிக்கிழமை தனது அரசியல் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். மேலும் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டினார்.

Advertisement

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் இருந்தன. இந்நிலையில் அவரது கட்சி பெயருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் 'TVK' என சுருக்கமாக அழைக்கப்படும் .

இந்நிலையில் 'TVK' என்ற பெயரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் நடிகர் விஜய் கட்சி 'TVK' என்ற பெயரில் அழைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் விஜய் கட்சிக்கு தேர்தல் ஆணையம் TVK என்ற பெயரை வணங்காது எனவும் தெரிவித்திருக்கிறார். வேறு பெயர் தேர்வு செய்யும்படி தமிழக வெற்றி கழகத்தை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும் எனவும் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

Tags :
name controversypolitical partytvkvelmuruganvijay
Advertisement
Next Article