முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திமுக பாணியில் நடிகர் விஜய்..? கொந்தளிக்கும் ரசிகர்கள்..!! ஒரே ஒரு பதிவால் பெரும் அதிருப்தி..!!

Former Chief Ministers Perarinar Anna, Karunanidhi and Chief Minister M.K.Stalin do not wish on the festivals of Vinayagar Chaturthi and Diwali Thirunal.
02:57 PM Sep 16, 2024 IST | Chella
Advertisement

ஓணம் திருநாளை ஒட்டி விஜய், மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள் என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். இதனை மலையாளத்திலும் குறிப்பிட்டிருந்தார். இந்த வாழ்த்துச் செய்தியை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஒரு மோதல் ஏற்பட்டது. ஒரு தரப்பினர் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினர். மற்றொரு தரப்பினர் தமிழ்ப்புத்தாண்டுக்கு வாழ்த்துக் கூறாதது ஏன் என வினா எழுப்பி கடுமையான தாக்கி பதிவிட்டிருந்தனர்.

Advertisement

இதற்கு விஜயின் அதரவாளர்கள், தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜயின் வளர்ச்சியை கண்டு அஞ்சுவதாக சாடியிருந்தனர். இதற்கிடையே, பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது அவரவர் விருப்பம் என கூறியிருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. இது ஒரு புறம் இருக்க, வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நிதியுதவி அளிக்காமல் தற்போது ஏன் கேரள மக்கள் மீது கரிசனம் காட்டுகிறார் என ஒரு சிலர் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜயின் ஆதராவளர்கள், வயநாடு நிலச்சரிவின் போது விஜய் மக்கள் மன்றம் சார்பில் செய்த உதவிகளை பட்டியலிட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தி, தீபஒளித் திருநாள் ஆகிய பண்டிகைகளுக்கு முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துக் கூறுவது இல்லை. அவர்கள் பாணியையே விஜய் தற்போது கையில் எடுத்துள்ளாரா? அதற்கு விஜய் அறிவிக்கும் அவரின் கட்சிக் கொள்கைதான் பதில் சொல்ல வேண்டும்.

Read More : நடிகர் சித்தார்த்துக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..?

Tags :
ஓணம் பண்டிகைதமிழ்நாடுதிமுகவிஜய்
Advertisement
Next Article