For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகர் விஜய் பாஜகவின் பி டீம்!… விமர்சனமும், அண்ணாமலையின் அதிரடி பதிலும்!

06:25 AM Feb 04, 2024 IST | 1newsnationuser3
நடிகர் விஜய் பாஜகவின் பி டீம் … விமர்சனமும்  அண்ணாமலையின் அதிரடி பதிலும்
Advertisement

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவர் பாஜகவின் பி டீம் என்ற விமர்சனத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

Advertisement

"என் மண் என் மக்கள்" யாத்திரையின் ஒரு பகுதியாக, நேற்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். முன்னதாக, குடியாத்தம் பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, கள் இயக்கத்தினர் இறக்கும் முதல் கள்ளை தான் குடிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்த யாத்திரை, மாற்றங்களுக்கான யாத்திரை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து, மற்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 12 கோடி வீட்டில் கைப்பற்றியதால் தேர்தலில் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2019இல் நடைபெற்ற தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்

விவசாயிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கையான காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், கால்வாய் சீரமைப்பு, மாம்பழத்திற்கான குளிர்சாதன வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத எம்.பிதான் கதிர் ஆனந்த். அமைச்சர் துரைமுருகனின் ஊரான கே.வி.குப்பம், காங்குப்பம் பகுதியில் கதிர் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி ஏ.சி.சண்முகம் லீட் கொடுத்தார். விரைவில் அமலாக்கத்துறை கதிர் ஆனந்த் வீட்டின் கதவைத் தட்ட வாய்ப்பு உள்ளது” என்றார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை, 2024 தேர்தலுக்குத் தயாராக இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்னும் காலம் இருக்கிறது. மனோஜ் தங்கராஜுடன் விவாதிக்க நான் எனது செய்தித் தொடர்பாளரை வேண்டுமானால் அனுப்பி வைக்கிறேன்.

அவரோடு எங்கள் செய்தித் தொடர்பாளர் எப்போது வேண்டுமானாலும் வந்து பேசத் தயார். அதற்கான நேரத்தையும், இடத்தையும் அவர் குறிப்பிடட்டும். வேண்டுமானால், அவர்களது தலைவரான மு.க.ஸ்டாலினை அனுப்பி வைத்தால், பாரதிய ஜனதா கட்சி தலைவர் என்ற முறையில் நான் நேரடியாக விவாதிக்க தயார்.

இந்தியா சரித்திரத்தில் யாராவது ஒரு முதல்வரோ அல்லது பிராந்தியத் தலைவரோ 10 நாள் டூர் போய் பார்த்திருக்கிறீர்களா? என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என எங்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக. ஸ்பெயினுக்குச் சென்றுதான் முதலீட்டை இழுக்கிறோம் என்று சொன்னால், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வியுற்றதாக ஒப்புக் கொள்கிறார்களா? இந்தியாவின் மிக முக்கியமான ஊழல்வாதிகள் இந்தியா கூட்டணியில்தான் உள்ளனர்.

மேலும், நடிகர் விஜய் பாஜகவின் பி டீம் என்று விமர்சிக்கப்படுவது குறித்து பதிலளித்த அண்ணாமலை, யார் யாருடைய பி டீ என்று தமக்கு தெரியாது என்றும் பாஜக எப்போதும் மக்களுக்கான ஏ என்று கூறினார்.

Tags :
Advertisement