தந்தையின் 2-வது திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய்..!! வைரலாகும் புகைப்படம்..!!
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குநராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர், இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். 1981ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் எஸ்.ஏ. சந்திரசேகர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 1973ஆம் ஆண்டு ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார். பின்னர், 1974ஆம் ஆண்டு இவர்களுக்கு நடிகர் விஜய் மகனாகப் பிறந்தார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். அதே போல் தாய் ஷோபா இந்து மாதத்தை சேர்ந்தவர். இவர்களின் திருமணம் இந்து முறைப்படி தான் முதலில் நடைபெற்றது.
தொடர்ந்து விஜய்க்கு 6 வயது இருக்கும்போது எஸ்.ஏ.சி - ஷோபா இருவரும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டனர். இந்த விஷயத்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.