முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரஜினிக்கே டஃப் கொடுத்த நடிகர் சூரி..!! ’கருடன்’ திரைப்பட வசூல்..!! 15 நாட்களில் இத்தனை கோடியா..?

It has been reported that actor Suri starrer 'Karudu' is nearing 50 crore collection.
12:43 PM Jun 17, 2024 IST | Chella
Advertisement

நடிகர் சூரி நடித்த 'கருடன்' திரைப்படம் 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார் எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் கருடன். ''விடுதலை'' படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'நெடுஞ்சாலை' படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்து உள்ளனர்.

இந்நிலையில் 'கருடன்' படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'கருடன்' படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்த நிலையில், அப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான வரவேற்பால் வார இறுதியில் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கருடன் திரைப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை, ஓடிடி உரிமை இன்னும் விற்பனை ஆகவில்லை எனக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் லால் சலாம் இறுதி வசூலை 'கருடன்' முறியடித்துள்ளது. ரஜினியின் லால் சலாம் ரூ.17.46 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்..!! ஆவின் நிறுவனத்தில் வேலை..!! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
cinemaGarudanRajinisooritamil movie
Advertisement
Next Article