ஓயாத கலவரம்..!! வங்கதேசத்தில் நடிகர் மற்றும் அவரது தந்தை அடித்துக் கொலை!!
வங்கதேசத்தில் நடிகர் ஷாண்டோ கான் மற்றும் அவரது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு மத்தியில் வங்கதேச நடிகர் ஷண்டோ கானும், அவரது தந்தையும் தயாரிப்பாளருமான செலிம் கான் ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தந்தை மற்றும் மகன் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அடித்துக்கொல்லப்பட்ட வங்கதேச நடிகர் ஷண்டோ கான் 2019 ஆம் ஆண்டில், உத்தம் ஆகாஷ் இயக்கிய 'பிரேம் சோர்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
நடிகர் ஷண்டோ கானின் தந்தை செலிம் கான் வங்கதேச அவாமி லீக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர் என்று தகவல் தெரிவிக்கின்றன. அவாமி லீக் ஆட்சியின் போது, சந்த்பூரில் உள்ள பத்மா-மேக்னா நதியில் சட்டவிரோதமாக மணல் வெட்டி, பல கோடி ரூபாய்க்கு அதிபதியான சலீம் கான், இந்த வழக்கில் சிறை சென்றார். செலீமும் அவரது மகன் சாந்தோவும் திங்கள்கிழமை சந்த்பூரிலிருந்து தப்பிச் செல்லும் போது இருவர் மீதும் மர்ம கும்பல் மோசமாக தாக்கத் தொடங்கியது.
ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்து தப்பினர். சிறிது தூரம் சென்ற பிறகு, மீண்டும் ஒரு கும்பல் தாக்கியதில் சந்த்பூரின் பகாரா பஜாரில் சலீம் கான் மற்றும் அவரது மகன் சாந்தோ கான் இருவரும் கொல்லப்பட்டனர். சாந்தா கானின் மரணத்தை அவரது மாமனார் எம்ஐ மோமின் கான் உறுதிப்படுத்தி உள்ளார். இருவரையும் கொன்று சடலத்தை சாலையில் விட்டுச் சென்றது யார் என்பது குறித்து தெரியவில்லை.
Read more ; “இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்..!!” – முகமது யூனுசுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்