30 வருஷம் ஆச்சு.. இப்போ நினைத்தாலும் கை, கால் நடுக்கம் வந்துவிடும்!! - நடிகர் செந்தில் எமோஷனல் டாக்
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 9களில் காமெடி ஜாம்பவானாக கலக்கி வந்தவர் தான் நடிகர் செந்தில். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த பல திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. சில காலம் படவாய்ப்பில்லாததால் இருவரும் சினிமாவில் இருந்து விலகியிருந்தனர்.
இந்நிலையில், நடிகர் செந்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு குறித்து பேசி இருக்கிறார். அதில் பல வருடங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உருக்கமாக பேசியிந்தார். அதில் செந்தில் பேசுகையில் நான் ஆரம்ப காலகட்டத்தில் காரை ரொம்பவே வேகமாக ஓட்டுவேன்.
என்னோடு டப்பிங் பேசுவதற்காக யாராவது வந்தால் கூட அவர்கள் என்னுடைய காரில் வருவதற்கே பயப்படுவார்கள். நான் அந்த அளவுக்கு வேகமாக போவேன். ஒரு நாள் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் என்னுடைய காரில் வந்திருந்தார். அவர் நான் கார் ஓட்டுவது பார்த்து தயவுசெய்து காரை நிறுத்தி விடுங்க நான் இறங்கணும் என்று கத்தி விட்டார். அந்த அளவிற்கு நான் வேகமாக ஓட்டுவேன்.
ஆனால் நான் எப்போதும் கார் ஓட்ட மாட்டேன் எனக்குன்னு ஒரு டிரைவர் இருக்கிறார். அவர் இல்லாத நேரங்களில் நான் ஓட்டுவேன். இல்லையென்றால் எங்கேயாவது நானாக ஓட்டிட்டு போகணும் என்று தோணுச்சுன்னா நான் ஓட்டுவேன். ஒரு முறை இப்படித்தான் என்னுடைய டிரைவர் அவருக்கு குழந்தை பிறந்திருக்கு என்று ஊருக்கு போய் விட்டார். அந்த நேரத்தில் எனக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி போன் வந்தது. காலை மூணு மணிக்கு நானும் வீட்டிலிருந்து கிளம்பி போனேன். கொஞ்ச நேரம் போய்க்கொண்டிருக்கும் போது எனக்கு எப்படியோ தூக்கம் வந்து விட்டது. நான் கண் அசர வண்டி தடம் மாறிவிட்டது.
அப்போது ரோட்டில் இருந்து பக்கத்தில் இருந்த வயல்காட்டிற்குள் சென்று வண்டி உருண்டு கொண்டே இருக்கிறது. போகிற போக்கில் ஒரு பஸ் ஸ்டாண்டில் இடித்து இருக்கிறேன், ட்ரான்ஸ்பார்மில் இடித்திருக்கிறேன். கடைசியாக ஒரு வேப்ப மரத்தில் இடித்து கார் நின்றது. அந்த வேப்ப மரத்தில் மோதியதால் தான் நான் அன்று உயிர் பிழைத்தேன். என்னுடைய காரில் இரண்டு பக்க டோர் எல்லாம் கிடையாது. எல்லாம் சப்பி போய்விட்டது என்னோடு ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் இருந்தார். அவர் கோவிந்தா கோவிந்தா என்று கத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அந்தப் பக்கமாக லாரியில் வந்தவர்கள் வண்டியை நிறுத்தி கடப்பாரை வைத்து குத்தி எப்படியோ எங்களை வெளியே எடுத்தாங்க. அதற்குப் பிறகு நான் கார் ஓட்டுனதே கிடையாது. 30 வருஷம் கடந்து விட்டது ஆனாலும் அதற்கு பிறகு நான் கார் ஓட்டுனது கிடையாது. ஆரம்பத்தில் நானும் ரேஸ் கார் ஓட்டுவது போல வேகமாக ஓட்டினேன். ஆனால் ஒரு முறை பட்ட பிறகு தான் அதை திரும்ப செய்கிறது கிடையாது என்று அந்த பேட்டியில் நடிகர் செந்தில் தான் உயிர் பிழைத்து வந்த கதையை சொல்லி இருக்கிறார்.
Read more ; தண்ணீரோடு தங்கம் வழியும் அதிசய ஆறு! இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா?