கிரிக்கெட் லெஜண்ட்.. சிறந்த ஆல்ரவுண்டர்.. கைத்தட்டி வாழ்த்துங்க..!! - ICC தலைவரான ஜெய்ஷாவை தனி ஸ்டைலில் பாராட்டிய பிரகாஷ்ராஜ்
ஐசிசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அதோடு அவரது தற்போதைய பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக ஜெய் ஷா மிகக் குறைந்த வயதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தேசிய அளவில் ஒருபோட்டிக்கூட விளையாடாத ஜெய் ஷா எப்படி BCCI செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்விகள் முன்னதாக பலருக்கு எழுந்தது. தற்பேது ICC தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூட ஜெய் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ICC தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். அவரது சமூகவலைதள பதிவில், "பேட்ஸ்மேனாகவும் பவுலராகவும் விக்கெட் கீப்பராகவும் ஈடு இணையற்ற ஆல் ரவுண்டராகவும் கிரிக்கெட்டுக்கு இந்தியா உருவாக்கி தந்திருக்கும் ஓர் அற்புதமான, பெருமைக்குரிய திறமையாளர் தற்போது ICC தலைவராக, அதுவும் போட்டியின்றி, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்து நம் பாராட்டுகளை தெரிவிப்போம்" என கிண்டல் அடித்துள்ளார்.
Read more ; National Sports Day 2024 | தேசிய விளையாட்டின் பிதாமகன்..!! களத்தில் இறங்கினால் ஜெயிக்காமல் விடமாட்டார்..!!