கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு..!! - நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்
பெண் பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு, பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் வெளியே துப்பாக்கி குண்டுகளில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் 18 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவரான மனோஹர் யாதவே உட்பட இருவர் கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பரசுராம் வாக்மோர் மற்றும் மனோஹர் யாதவே ஆகிய இருவருக்கும் ஹிந்துத்துவ அமைப்புகள் சில உற்சாக வரவேற்பு அளித்துள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளப் பக்கத்தில் "கொலையாளிகளுக்கும் பாலியல் வன்புணர்வாளர்களுக்கும் ஜாமீன் வழங்கப்படுவதுதான் இந்நாட்டில் சட்டம்.. எனப் பதிவிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஒரு பதிவில், "மறைந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி மற்றும் சாய் பாபா ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டு நிர்வாக ரீதியாக சாகடிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் நாம் பார்வையாளர்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம்?? உமர் காலித்தையும் அரசியல் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க, தன்னுடன் இணைந்து குரல் கொடுக்கவும்" பிரகாஷ் ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
Read more ; லட்சமோ, கோடியோ அல்ல.. ரத்தன் டாடா அணிந்திருந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?