“அதில் என்ன தவறு..”இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வது குறித்து நடிகர் மோகன்லால் ஓபன் டாக்..!
சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார்களாக வலம் வரும் உச்ச நடிகர்கள் தங்களை விட வயது குறைவான பெண்களுடன் ரொமான்ஸ் செய்து வருகின்றனர். இந்த போக்கு கடந்த சில ஆண்டுகளாக மாறி வந்தாலும், ஒரு சில உச்ச நடிகர்கள் தற்போதும் இளம் வயது ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இதுகுறித்து பேசி உள்ளார்.
திரையில் சித்தரிக்கும் போது வயதை விட நம்பிக்கையும் பார்வையாளர்களின் வரவேற்பும் முக்கியம் என்று மோகன் லால் தெரிவித்துள்ளளார்.. இது ஒரு இயற்கையான செயல்முறை என்றும், தொழில்துறையின் ஒரு பகுதியாக எப்போதும் இருக்கும் சுழற்சி என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் திரைத்துறையில் இது பொதுவான விஷயம் தான் புதிய விஷயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 100 வயதிலும் ஒருவர் ஆரோக்கியமாகவும், நடிப்புத் திறனுடனும் இருக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய மோகன்லால் " இதில் ஹீரோ தான் தீர்மானிக்கும் காரணி, உங்கள் கதாபாத்திரத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்பது முக்கியம். உங்களுக்கு சங்கடமாக இருந்தால், இது எனக்கு நல்ல பாத்திரம் அல்ல என்று நீங்கள் அதை தவிர்க்க வேண்டும். ஆனால் மக்கள் அதை ஏற்கத் தயாராக உள்ளனர்.. பின்னர் ஏன் இளம் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யக்கூடாது? ஏனெனில் இது நடிப்பு, இது வயது தொடர்பானது அல்ல” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் வெளியான பரோஸ் என்ற படத்தின் மூலம் மோகன்லால் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் டிசம்பர் 27, 2024 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. 3டி ஃபேன்டஸி த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் மோகன்லாலுடன் மேயோ ராவ் வெஸ்ட், ஜூன் விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருந்த போதிலும், பரோஸ் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்ய போராடியது. உலகளாவிய வசூல் ரூ. 6 கோடிக்கு குறைவாக, ரூ. 5.55 கோடிகளை மட்டுமே வசூலித்தது.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில் கேரளாவில் இப்படம் வெறும் ரூ.3.51 கோடியை மட்டுமே வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.