பானுப்பிரியாவிற்கு கார்த்திக் செய்தது துரோகம்.. அவரால் அந்த நடிகையின் கெரியரே போச்சு..!! - பிரபலம் பகீர்
தமிழ் சினிமாவின் 80-90 களில் சாக்லெட் நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'அலைகள் ஓய்வதில்லை ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெறவே நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்த படங்கள் வரிசைகட்டி நின்றது, தனக்கான படத்தை தேர்வு செய்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.
பொதுவாக கார்த்திக் எந்த நாயகியாக இருந்தாலும், அவர்களுக்கு ரூட்டு போட்டுவிடுவார் அப்படித்தான் பானுப்பிரியாவிற்கும் ரூட் போட்டதாக இடையில் கிசு கிசுக்கள் பரவியது. நடிகர் கார்த்திக், பானுப்பிரியாவின் காமினேஷன் பக்காவாக இருக்கும். இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பறவை, கோபுர வாசலிலே, சக்கரவர்த்தி, அமரன் என பல படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் பானுபிரியாவின் சினிமா மார்கெட் குறைய காரணமே கார்த்திக் தான் என பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், அளித்துள்ள பேட்டியில், சக்கரவர்த்தி படம் ஷூட்டிங்க் நடந்து கொண்டிருந்த போது, பானுப்பிரியாவிடம் இந்த படம் வெளிவருவதில் சிக்கல் இருக்கு. பல நாட்களாக படப்பிடிப்பு நடந்து கொண்டே இருக்கு, இதனால், நீ தயாரிப்பாளரிடம் மொத்த பணத்தையும் வாங்கிவிடு என்று பானுப்பிரியாவை கார்த்திக் ஏற்றிவிட்டுள்ளாராம்.
இதை உண்மை என நம்பிய பானுப்பிரியா, திடீரென்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வராமல் வீட்டில் இருந்து கொண்டு பேசிய மொத்த சம்பளத்தையும் கொடுத்தால்தான் நடிக்க வருவேன் என்று சொல்லி பிரச்சனை செய்துள்ளாராம், டப்பிங் முடிந்த பின்னர் முழுமையாக பணத்தை கொடுத்து விடுவேன் என தயாரிப்பாளர் கூறியதையும் பானுபிரியா ஏற்க மறுத்துள்ளார்.
நீங்கள் எனக்கு முழு சம்பளத்தை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆகையால் எனக்கு முழு சம்பளத்தை கொடுங்கள் என்று முடிவாக சொல்லிவிட, 5 லட்சத்திற்கான டிடி ஒன்றை எடுத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தார். கார்த்திக்கின் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படி பானுப்பிரியா செய்ததால், மற்ற தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய யோசித்தார்கள். இதனாலையே அவருக்கு மார்கெட் குறைந்தது என்று அந்த பேட்டியில் தமிழா தமிழா பாண்டியன் பேசி உள்ளார்.
Read more ; ரெட் அலர்ட் எதிரொலி..!! சென்னைக்கு விரைந்த பேரிடர் மீட்புப் குழுக்கள்..!!