ரொம்ப கஷ்டமா இருக்கு..!! பாலியல் தொல்லையை விட பொய் குற்றசாட்டு வேதனையானது..!! - மலையாள நடிகர் ஜெயசூர்யா
மலையால நடிகர் ஜெயசூர்யா மீது இரண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் உள்ளன நிலையில் தன் மீதான பாலியல் குற்றசாட்டுகளை சட்டப்படி சந்திக்க உள்ளதாகவும், இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்றுவதற்கு பங்களித்தவர்களுக்கு நன்றி எனவும் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மலையாள நடிகர் ஜெயசூர்யா மீதும் நடிகைகள் பாலியல் குற்றசாட்டை முன்வைத்தனர். இந்நிலையில், இது குறித்து மௌனத்தை கலைத்தார் மலையாள நடிகர் ஜெயசூர்யா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும், உங்கள் ஆதரவை அளித்து எனக்கு ஆதரவாக நிற்கும் அனைவருக்கும், நன்றி. எனது தனிப்பட்ட கடமைகள் காரணமாக, நானும் எனது குடும்பத்தினரும் அமெரிக்காவில் இருந்தோம். எனக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் அடிப்படையில் இரண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன, இது என்னையும், எனது குடும்பத்தினரையும் மற்றும் என்னை நெருங்கிய அனைவரையும் சிதைத்துவிட்டது.
நான் இதை சட்டரீதியாக முன்னோக்கி நகர்த்த முடிவு செய்துள்ளேன். இந்த வழக்கு தொடர்பான மீதமுள்ள நடவடிக்கைகளை எனது வழக்கறிஞர் குழு கவனித்துக் கொள்ளும். மனசாட்சி இல்லாத எவருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவது எளிது. அதை ஒருவர் உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன். துன்புறுத்தல் என்ற தவறான குற்றச்சாட்டு, துன்புறுத்தலைப் போலவே வேதனையானது, ஒரு பொய் எப்போதும் உண்மையை விட வேகமாகப் பயணிக்கும், ஆனால் உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
நீதித்துறை மீது தனக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்திய நடிகர், "நான் இங்கு பணியை முடித்தவுடன் திரும்பி வருவேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும். எங்கள் நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நன்றி இந்த பிறந்தநாளை மிகவும் வேதனையான பிறந்தநாளாக மாற்றுவதற்கு பங்களித்தவர்கள், பாவம் செய்யாதவர்கள் கல்லை எறியட்டும், ஆனால் பாவம் செய்தவர்கள் மீது மட்டுமே என அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.
Read more ; மக்களுக்காக காட்டு விலங்குகளைக் கொல்ல நமீபியா திட்டம்!. அதிர்ச்சி காரணம்!.