For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாலு சுவருக்குள்ள ரூல்ஸ் பேசுற.. அதே ரூல்ஸ நான் ரோட்ல பேசினா என்ன பார்த்து குறைக்கிற..!! - ஜெயம்ரவி ரீசண்ட் வீடியோ

Actor Jayam Ravi has shared a video on his Instagram page where he attended the music launch of his upcoming film Brother.
10:25 AM Sep 24, 2024 IST | Mari Thangam
நாலு சுவருக்குள்ள ரூல்ஸ் பேசுற   அதே ரூல்ஸ நான் ரோட்ல பேசினா என்ன பார்த்து குறைக்கிற       ஜெயம்ரவி ரீசண்ட் வீடியோ
Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரியப் போகிறார் என்று கிசுகிசு வெளியான நிலையில் திடீரென இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் தான் மனைவி ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

Advertisement

அதோடு அதில் தன்னை சார்ந்தவர்களுக்காக தான் எடுத்த முடிவு என்றும் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அடுத்த சில நாட்களில் ஆர்த்தி இது எனக்கே தெரியாமல் ஜெயம் ரவி அவராகவே எடுக்க முடிவு. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கிறேன். நானும் என்னுடைய குழந்தைகளும் தவித்து வருகிறோம். என் தரப்பு நியாயத்தை அவரிடம் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். ஆனால் அது முடியவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இப்போது இவர்கள் இருவரும் விவாகரத்து அறிவித்திருக்கும் நிலையில் அது குஷ்பூவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "மனைவியை பிரிந்தவன் மனுசனே இல்லை.. அவனுக்கு வாழவும் தகுதியில்லை" என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த வீடியோவை பாடலுடன் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வீடியோவில்,  "உன் பக்கம் ஃபால்ட் வச்சு என்னை ஏண்டா முறைக்கிற.. நான் ஃபுல் ஸ்பீடு பேச வந்தா ஏன்டா ஓடி ஒளியிற? நான்கு வால்ஸ்க்குள்ள மட்டும் ரூல்ஸ் ரொம்ப பேசி நடிக்கிற... அதே ரூல்ஸ் நான் ரோட்ல பேசினா ஏன்டா என்னை பார்த்து குறைக்கிற... நான் முட்டாள் முதியா எனக்கு ரத்தம் வந்தால் உனக்கு தக்காளி சட்னியா.. என்னோட ரைட் ஸ்கீம் பார்த்து என்ன கிண்டல் பண்றியா... மக்காமிஷி பிரச்சனைய ரைட் ஹேண்டில் ஹேண்டில் பண்ற மைக்கல் ஹசி என்ற அந்த பாடலை எடிட் செய்திருக்கும் நிலையில் இது அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது. அதோடு இந்தப் பாடல் ஜெயம் ரவி பலருக்கும் பதில் சொல்லும் வகையில் பகிர்ந்திருக்கிறாரா என்று கமெண்டில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Read more ; சற்றுமுன்.. திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி கைது? – என்ன விவகாரம்?

Tags :
Advertisement