For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரபல இளம் நடிகையுடன் ஹனிமூன் சென்ற நடிகர் ஜெய்..!! வைரலாகும் புகைப்படம்..!!

04:14 PM May 01, 2024 IST | Chella
பிரபல இளம் நடிகையுடன் ஹனிமூன் சென்ற நடிகர் ஜெய்     வைரலாகும் புகைப்படம்
Advertisement

இளம் நடிகை பிரக்யா நாக்ரா கழுத்தில் தாலியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, புது வாழ்க்கை ஆரம்பம் என நடிகர் ஜெய் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைத்துள்ளார்.

Advertisement

கோலிவுட் திரையுலகில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஜெய். தன்னுடைய முதல் படத்திலேயே, தளபதி விஜய்க்கு தம்பியாக 'பகவதி' படத்தில் நடித்தார். இந்த படம் வந்த போது, ஜெய் ஒரு ஜாடையில் பார்க்க விஜய் போலவே இருப்பதாக கூறியதால், ஜெய்க்கு அடுத்தடுத்த படங்களில் நடக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர், கடந்த 2007இல் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'சென்னை 28' படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் ஜெய் நடித்த, சுப்ரமணியபுரம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், ஜெய் அடுத்த லெவலுக்கு சென்றார்.

எனினும் இந்த படத்திற்கு பின்னர் இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. தொடர்ந்து வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த ஜெய், அட்லி இயக்கத்தில் நடித்த ராஜா ராணி திரைப்படம் இவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. பின்னர், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து ஜெய் நடித்த அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது கறுப்பர் நகரம் என்கிற படத்திலும் ஜெய் நடித்து வருகிறார்.

சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத நடிகர் ஜெய், ஏற்கனவே நடிகை அஞ்சலியுடன் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற படங்களில் நடித்த போது, இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்வது போல் இருவரும் நடந்து கொண்டது ஒருபுறம் இருக்க, பின்னர் அஞ்சலி இருவரும் நண்பர்கள் மட்டுமே என தெரிவித்தார். தொடர்ந்து, பிரபல இளம் நடிகையான பிரக்யா நாக்ராவுடன் ஜோடியாக ஜெய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரக்யா இந்த புகைப்படத்தில் தாலியோடு இருக்க… ஜெய் தன்னுடைய கையில், பாஸ்போர்ட் வைத்துள்ளார். திருமணமான கையேடு ஹனி மூன் செல்வது போல் உள்ள இந்த புகைப்படத்திற்கு கீழே கடவுளின் ஆசியோடு புதிய வாழ்க்கை ஆரம்பம் என தெரிவித்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலர், இது நிஜமா? அல்லது திரைப்பட புரோமோஷனுக்காக இப்படி போஸ் கொடுத்துள்ளார்களா? என குழம்பி போய் உள்ளனர். ஆனால், இது குறித்து விசாரிக்கையில் ஜெய், பிரக்யா நாக்ரா ஜோடியாக நடிக்கும் 'பேபி அன்ட் பேபி' என்ற படத்தின் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படம் இது என்பது தெரியவந்துள்ளது.

Read More : உடல் எடையை குறைக்க இரவு உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Advertisement