For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'நடிகர் தனுஷுக்கு விரைவில் இரண்டாவது திருமணம்!!' கஸ்தூரிராஜா எடுத்த அதிரடி முடிவு..!

02:02 PM May 26, 2024 IST | Mari Thangam
 நடிகர் தனுஷுக்கு விரைவில் இரண்டாவது திருமணம்    கஸ்தூரிராஜா எடுத்த அதிரடி முடிவு
Advertisement

விவாகரத்து கிடைத்த உடன் தனுஷுக்கு மறுமணம் செய்து வைக்க அவரின் அப்பா கஸ்தூரி ராஜா முயற்சி செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து கடந்த 2004ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.18 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், லிங்கா மற்றும் யாத்ரா என 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ம் ஆண்டில் அவர்களது பிரிவை, தங்களது டிவிட்டர் பக்கங்களில் அறிவித்தனர்.

எனினும் கணவன், மனைவிக்குள் ஏற்படும் குடும்ப பிரச்னைகளும், சிக்கல்களும் நாளடைவில் தீர்ந்து மீண்டும் அவர்கள் வாழ்வில் இணைந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அது ஏமாற்றத்தில் முடிந்தது. கடந்த மாதத்தில், இருவரும் தங்களுக்கு விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அதனால் அவர்களது நிரந்தர பிரிவு உறுதியாகி விட்டது.

இந்நிலையில், தனுஷூக்கு 2வது திருமணம் செய்ய தனுஷின் தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். தங்களது சொந்தத்தில் உள்ள ஒரு பெண்ணையே அவர்கள் பார்த்து முடிவும் செய்துள்ளனர். பெண் வீட்டாரும் ஓகே சொல்லி விட்ட நிலையில், தனுஷிடம் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் தனுஷ் இன்னும் உறுதி சொல்லாமல், நழுவி வருகிறார். அவர் பிடி கொடுக்காமல் நழுவி வந்தாலும் விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது.

“ஸ்கூல் படிக்கும் போது அந்த விஷயத்தால் ரொம்பவே கஷ்டப்பட்டேன்..!” – கேப்ரில்லா உடைத்த ரகசியம்..!

Tags :
Advertisement