For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'Best Foreign Language Movie' பிரிட்டன் தேசிய விருதை வென்ற தனுஷ் படம்!! யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..

Actor Dhanush starrer 'Captain Miller' has won the British National Award.
01:28 PM Jul 04, 2024 IST | Mari Thangam
 best foreign language movie  பிரிட்டன் தேசிய விருதை வென்ற தனுஷ் படம்   யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
Advertisement

நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பிரிட்டன் தேசிய விருதை வென்றுள்ளது.

Advertisement

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பீரியட் ஜானரில் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக இப்படத்தை இயக்கியிருந்தார் அருண் மாதேஸ்வரன். ஆக்ஷன் காட்சிகள், மேக்கிங் ஆகியவை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும், கதை, திரைக்கதை நன்றாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதோடு வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாகவும், இப்படியான படங்களில் தனுஷ் நடிக்கலாமா என்றும் ஃபேமிலி ஆடியன்ஸ் கேள்வி எழுப்பியிருந்தனர்.

கேப்டன் மில்லர் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி படக்குழு எந்தவித அறிவிப்பும் வெளியிடவே இல்லை. படத்திற்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்கள் காரணமாக தான் கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் வசூலை படக்குழு அறிவிக்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது சர்வதேச அளவில் இந்த படம் கவனம் ஈர்த்துள்ளது. , லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரிட்டன் தேசிய விருது விழாவில் 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த அயல் மொழித் திரைப்படம் பிரிவில் இந்தியாவிலிருந்து ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், லண்டனில் நடைபெற்ற இந்த தேசிய விருது விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்படமாகக் ‘கேப்டன் மில்லர்’ தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. படக்குழுவின் சார்பாக, இவ்விருதை சத்யஜோதி நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் பெற்றார். சர்வதேச அளவில் முக்கியமான விருதை வென்ற ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் பிரிவில் ஜெர்மானிய படங்களான சிக்ஸ்டி மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்ஸி உட்பட மேலும் படங்களும் போட்டியிட்டன. ஆனால், கேப்டன் மில்லர் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தனுஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement