பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா மனு.. நீதிமன்றத்தில் தாக்கல்..!
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ந் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு, இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்சியில் ஆழ்த்தியது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிய போவதாகவும், இருவரும் கோர்ட்டில் விவாகரத்திற்கு விண்ணப்பித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. அது வெறும் வதந்தி என சொல்லப்பட்டு வந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.