For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வயநாடு நிலச்சரிவு..!! ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ஜோடி..!!

Actor Bahad Basil and actress Nazriya have donated Rs 25 lakhs for the relief work of the K Rala landslide victims.
07:53 AM Aug 02, 2024 IST | Mari Thangam
வயநாடு நிலச்சரிவு     ரூ 25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பகத் பாசில்  நஸ்ரியா ஜோடி
Advertisement

கே ரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக நடிகர் பஹத் பாசில் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு கேரளாவுக்கு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர்.

அதே போல் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் முதல் தினமே நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினர்.

இப்பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, நடிகர் பகத்ஃபாசில் மற்றும் அவரது மனைவி நடிகை நஸ்ரியா நசிம் இருவரும் ரூ.25 லட்சம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தங்கள் இரங்கலை பதிவு.

இதுகுறித்து தங்கள் இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து நமது அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டத்தக்கவை. எமது மக்களின் அர்ப்பணிப்பு உறுதியும் உண்மையிலேயே உத்வேகம் அளிப்பதாக உள்ளது மேலும் இந்த சவாலான நேரத்தில் எங்களது ஆதரவை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவ, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 25,00,000 வழங்குகிறோம். இந்த பங்களிப்பு உதவும் என்று நம்புகிறோம் தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குங்கள். இந்த கடினமான நடைமுறையில் நாம் செல்லும்போது எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் நம் மக்களுடன் உள்ளன. ஒன்றாக, சகித்துக்கொண்டு ஜெயிப்போம்' என பதிவிட்டிருந்தார்.

Read more ; மூத்த குடிமக்களுக்கு உதவும் சூப்பரான திட்டம்.. கடைசி காலத்தில் பிரச்சினையே இல்லை!!

Tags :
Advertisement