முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Video : நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்து.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..! ரேஸில் பங்கேற்பாரா?

Actor Ajith was practicing for a car race when his car crashed into a barrier and caused a sensation.
06:26 PM Jan 07, 2025 IST | Mari Thangam
Advertisement

நடிகர் அஜித் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது, அவருடைய கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். 90 களில் தொடங்கி தற்போது வரை இவருக்கான ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர குறையவில்லை. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார் அஜித். நடிகர் அஜித் கார், பைக்குகளை அதிகம் விரும்பும் நபர் என்று நமக்கு தெரியும். இவர் பல்வேறு கார்பந்தயப் போட்டிகளில் கூட பங்கேற்றுள்ளார். 

உலகம் முழுவதும் பைக்கில் வலம் வர வேண்டும் என்கிற, தன்னுடைய கனவை நிஜமாக்கி கொள்ள தொடர்ந்து போராடிவரும் அஜித், ஏற்கனவே கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில், தற்போது பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு மூன்று கார் ரேஸில்  கலந்து கொள்ள பயிற்சி எடுத்து வருகிறார்.

அதன்படி அஜித் ஐரோப்பிய சீரிஸ் 992 g3 கப் பிரிவில் பங்கேற்பார் என தகவல் வெளியான நிலையில், அஜித்தின் அணிக்கான லோகோ ஆகியவை வெளியிடப்பட்டது. அஜித்தின் அணியில் மூன்று கார் ரேஸர்கள் இடம்பெற்றுள்ளனர். அஜித்தின் அணி அடுத்த ஆண்டு நடைபெற  உள்ள  24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24 ஹெச், போஸே 92 ஜிடி3  ஆகிய கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்க உள்ளார் இதற்கான சோதனை ஓட்டம் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

அப்போது பயிற்சிக்காக ரேஸிங் டிராக்கில் அஜித் குமார் ஓட்டிய கார் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியிருக்கிறது. அஜித் குமார் பத்திரமாகக் காயமில்லாமல் காரிலிருந்து வெளியேறினார். இது தொடர்பாக அவரின் ரேஸிங் குழு எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "பயிற்சியின்போது அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. அவர் காயமடையாமல் திரும்பிவிட்டார். Another day in the office… that’s racing!." என ஒரு காணொளியுடன் பதிவிட்டிருக்கிறார்கள்.

Read more ; “அப்பா, என்ன தொடாதீங்க” கெஞ்சிய மகள்; வீட்டில் யாரும் இல்லாத போது தந்தை செய்த காரியம்..

Tags :
actor ajithAjith car racecar crashcar race
Advertisement
Next Article