முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெற்றி.. 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேஸிஸ்.. கப்பை தட்டித்தூக்கிய அஜித்..!! - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்..

Actor Ajith participated in the 24-hour car race in Dubai with his team.
03:50 PM Jan 12, 2025 IST | Mari Thangam
Advertisement

திரைப்படங்களில் நடிப்பால் அசத்தி வரும் நடிகர் அஜித்குமார், தமது பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஓட்டும் திறனால் விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். முன்பு அஜித் குமார் ஃபார்முலா ரேஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். எனினும் 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த ஒரு கார் பந்தயத்திலும் அவர் பங்கேற்கவில்லை.

Advertisement

எனினும் அண்மையில் அஜிகுமார் ரேசிங்க் என்ற அணியை அஜித் குமார் வாங்கியதாக தகவல் வெளியானது. இந்த அணியில் அஜித்குமார் தவிர மேலும் மூன்று சர்வதேச கார் ரேஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். நடிகர் அஜித் குமாருடைய அஜித்குமார் ரேசிங் அணி துபாயில் தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இந்த போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் அவர் ஓட்டி வந்த கார் வளைவில் மோதியது. இதனால் அதிகவேகத்தில் வந்த கார் தடுப்பில் மோதி சுற்றியது.

ஆனால், உள்ளே அமர்ந்திருந்த அஜித் கவசங்கள் அணிந்திருந்ததால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான காரில் இருந்து இறங்கிய அஜித்குமார், பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பெரிய காயங்கள் ஏதும் இல்லை என்று கூறினர். இதனைத் தொடர்ந்து தம்மை கவலையில் இருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை அஜித்குமார் வெளியிட்டார்.

24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த கார் ரேஸ் நேற்று மதியம் 1.30 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது. டாப் 3ல் இடத்தை பிடித்துள்ள நிலையில், தனது வெற்றியை கொண்டாடும் விதமாக, நடிகர் அஜித் தனது கையில் இந்திய கொடியை ஏந்தி அனைவரையும் சந்தித்தார். அஜித்தின் இந்த வெற்றியை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

Read more ; சிறுநீரில் இரத்தம் வருவது புற்றுநோயின் அறிகுறியா..? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன..? – மருத்துவர்கள் விளக்கம்

Tags :
actor ajithcar racedubai
Advertisement
Next Article