முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே...! மழை காலத்தில் இதை எல்லாம் செய்ய கூடாது... மின்சார வாரியம் வெளியிட்ட வழிமுறைகள்...!

Actions to be taken at home and sub-station during rain and calamity in case of onset of North East Monsoon
07:16 AM Oct 16, 2024 IST | Vignesh
Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், மழை மற்றும் பேரிடர் காலத்தில் வீடு மற்றும் துணை மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCB-ஐ பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். ஈரக்கையால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது. மேலும் குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது. ஃப்ரிட்ஜ், - கிரைண்டர், மிக்ஸி, மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவற்றிக்கு நில இணைப்புடன் (Earth) கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிளக் பாயிண்ட்களில் மின்சார வயர்களை பிளக்கு உபயோகிக்காமல் பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதுபட்ட ஒயர்கள், மற்றும் பழுதான மின் சாதனங்கள் உங்கள் பயன்பாட்டில் இருப்பின், அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும் . குழந்தைகளை சுவிட்ச் போடச்சொல்லி விளையாட்டு காட்டுதல் கூடாது.

விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இடி, மின்னல், காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மின் கம்பத்திலோ, மின் கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே வயரிலோ, மின் இணைப்பிற்கான சர்வீஸ் பைப் அல்லது சப்போர்ட் பைப்பிலோ கொடிகள் கட்டி துணிகளை காய வைக்கக் கூடாது. மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது. மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும். டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

பீடர் ட்ரிப் ஆகும்போது உதவி மின் பொறியாளர் ஒப்புதல் இல்லாமல் பீடர் ஆன் செய்யக்கூடாது. பீடர் டிரிப் ஆன உடன் உடனடியாக ஊழியர்களை அனுப்பி, அந்த பீடரை முழுவதும் ரோந்து செய்து பழுதை கண்டறிந்து அதை நீக்கியபின்பு பீடரை ஆன் செய்ய வேண்டும். டிரென்சில் தேங்கும் மழை நீரை உடனுக்குடன் மின் மூலம் அகற்ற வேண்டும். மோட்டார். DC லீகேஜ் இருந்தால் துணை மின் நிலையத்திற்கு வரக்கூடிய மின்சாரத்தை உடனடியாக துண்டிப்பு செய்து, உரிய அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உடனடியாக மின்மினியோகத்தை நிறுத்தவும் மாற்று வழிகளில் மின்சாரம் விநியோகம் செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
electricityprecautionsrainrain and calamitytn governmentதமிழ்நாடு
Advertisement
Next Article