For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பால் விற்பனை அதிரடி நிறுத்தம்..!! ஆவின் நிர்வாகம் முடிவு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

10:09 AM Nov 21, 2023 IST | 1newsnationuser6
பால் விற்பனை அதிரடி நிறுத்தம்     ஆவின் நிர்வாகம் முடிவு     பொதுமக்கள் அதிர்ச்சி
Advertisement

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தி விற்பனை செய்து வருகிறது. சமீபகாலமாக பச்சை நிற பால்பாக்கெட்டை நிறுத்திவிட்டது. புதிய பாலை அறிமுகம் செய்து மறைமுகமாக விலை உயர்த்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து ஆவின் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பால் விற்பனை நாள் ஒன்றுக்கு சுமார் 14.50 லட்சம் லிட்டரும் மற்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பால் உபபொருட்களை சுமார் 1,000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், பொதுமக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் அனைத்து இடங்களிலும் எளிதில் கிடைக்கும். அந்த வகையில், ஆவின் நிர்வாகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலா தலங்களிலும் ஆவின் விற்பனை நிலையங்களை அமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் அனைத்து காலகட்டங்களிலும் பொதுமக்கள் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப அனைத்து ஆவின் பால் வகைகளும் எவ்வித தங்கு தடையுமின்றி விநியோகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement