அதிரடி காட்டிய ஆர்பிஐ..!! பிரபல வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம்..!! என்ன காரணம்..?
இந்தியாவில் 2022ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, மொத்தம் 12 தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கிகளும், 21 தனியார் வங்கிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் கணக்கு தொடங்குவது, சேமிப்பு கணக்கு, நிறுவன கணக்கு உள்ளிட்ட பல்வேறு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வங்கிகளுக்கான நெறிமுறைகளை முறையாக பின்பற்றாத வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அவ்வப்போது அபராதம் விதித்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது பிரபலமான தனியார் வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி மற்றும் HDFC வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் முன் அவை உரிய தகுதி பெற்றவையா? என சோதிக்காமல் சில நிறுவனங்கள் சேமிப்பு கணக்கு திறக்க அனுமதித்ததற்காக ஆக்சிஸ் வங்கிக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரவு 7 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசியதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பண அபராதம் விதிப்பது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் தொடங்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.
Read More : ’காதலியின் காலணியை கழற்றி’..!! ’கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றோம்’..!! நடிகர் தர்ஷன் பரபரப்பு வாக்குமூலம்..!!