சற்றுமுன்… தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!
5 ஆண்டுகளில் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், சமூகத்தில் அவர்களின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்யவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம்-2016 கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் கிடைக்கிறதா என்பது உறுதி செய்யப்படுவதுடன், அதற்குரிய விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.
அதன் அடிப்படையில் 2019-20 முதல் 2023-24-ம் கல்வியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களின் விவரங்கள், கற்பித்தல் பணிகளில் உள்ள ஆசிரியர்கள், இதர பணியிடங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோரின் தகவல்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித் தொகைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் அறிக்கையை https://uamp.ugc.ac.in/ என்ற இணையதள முகவரிக்கு ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காலதாமதமின்றி பணிகளை உடனடி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.