முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?' - யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை!

01:15 PM May 21, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்தது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பிரபல யூடியூபராக இருப்பவர் இர்ஃபான். இவர் இர்ஃபான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார், அதில் இவருக்கு சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் இந்த யூடியூப் சேனனில் புட் விலாக் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். மேலும், இவர் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் சில அரசியல்வாதிகள் உடன் இணைந்து வீடியோ எடுத்து போட்டுள்ளார்.

இவருக்கு ஹசீஃபா என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், பல திரை துறை நட்சத்திரங்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில், இர்ஃபான் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். துபாய்க்கு தம்பதியினர் சென்றுள்ள நிலையில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி அங்கு தெரிந்து கொண்டது மட்டுமின்றி அதனை நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.

இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும்.  குழந்தை கருவில் இருக்கும் போதே சிலர் இதன் பாலினத்தை அறிந்து,  சில காரணங்களால் அந்த குழந்தையே கருவிலே அழித்து வடுகின்றனர்.  இதனால், குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என  அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு தடை விதித்ததால்,  இர்பான் துபாய்க்கு தன்னுடைய மனைவியை அழைத்து சென்று பாலினம் பற்றி தெரிந்து கொண்டார்.  இதுதொடர்பான வீடியோவை தனது  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.  இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து,  இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்ள தடை இருக்கும் நிலையில்,  வெளிநாட்டில் பரிசோதனை செய்து வந்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை இதுதான் என்று அறிவித்த Youtuber இர்பான் மீது நடவடிக்கை எடுக்க எடுக்குமாறு காவல்துறையிடம் சுகாதாரத்துறை  பரிந்துரை செய்துள்ளது. சுகாதாரத் துறையின் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.  மேலும்,  Youtuber இர்பான் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமோனியா கசிவு வழக்கு: கோரமண்டல் ஆலைக்கு பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு..! 

Tags :
dubaiGender Revealhealth departmentpregnancyYouTuber Irfan
Advertisement
Next Article