’ஓட்டுக்கு வாக்காளர்கள் பணம் வாங்கினால் நடவடிக்கை’..!! சத்யபிரதா சாஹூ எச்சரிக்கை..!!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அவர்கள் தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் முன்னேற்பாடுகள், மற்ற மாநிலங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது பொதுமக்கள் வீட்டில் இருந்த படியே சி-விஜில் ஆப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க முன் வர வேண்டும் எனவும் இது குறித்த போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆப் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, சுவர் விளம்பரம், 10 மணிக்கு மேல் பிரச்சாரம் உள்ளிட்ட தகவல்களை புகார் கொடுக்க முடியும். அதிகபட்சமாக கேரளாவில் இருந்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளது. வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம் கொடுப்பது குற்றம். அதேபோன்று, பொதுமக்களும் வாக்களிக்க வேட்பாளர்களிடம் பணம் பெறுவதும் குற்றம். இந்த ஆப் மூலம் இது குறித்த புகார்கள் பெறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளார்.
Read More : Vadivelu | வடிவேலு நாக்குல சனி இருக்கு..!! முதல்வரே சொல்லிட்டாரு..!! பிரச்சாரத்திற்கு வராதீங்க..!!