For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை...! மத்திய அமைச்சர் அதிரடி...!

Action if medicines are sold at high prices
06:42 AM Aug 01, 2024 IST | Vignesh
மருந்துகள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை     மத்திய அமைச்சர் அதிரடி
Advertisement

அட்டவணையிடப்பட்ட மற்றும் அட்டவணையிடப்படாத மருந்துப் பொருட்களை, நிர்ணியிக்கப்பட்டதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

Advertisement

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், மருந்துப் பொருட்கள் விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு 2013-ன் அட்டவணை 1-ல், பட்டியலிடப்பட்டுள்ள சேர்மங்கள் மற்றும் பட்டியலிடப்படாத சேர்மங்கள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்கள், தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இவற்றின் விலையும் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, முந்தைய ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலையில், 10 சதவீதத்திற்கும் மேல் விலை நிர்ணயம் செய்ய எந்த மருந்து உற்பத்தியாளரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விதிமுறையை மீறும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement